நாட்டில் கொரோனா வைரஸ் சமூக பரவலாகியுள்ள நிலையில், அது தொடர்பான தகவல்களை அரசாங்கம் மூடி மறைத்து வருகின்றது என்று எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று சுகாதர அமைச்சர் விளக்கமளித்திருந்தார்.
இதன்போது எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தனது நிலைப்பாட்டை முன்வைத்து உரையாற்றினார்.
நாட்டில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியுள்ள போதும், இன்னும் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளாது பொய்யான கருத்துக்களை கூறி உண்மைத் தகவல்களை மூடி மறைத்து, மக்களை ஏமாற்றி வருகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சுகாதார பணிப்பாளர் நியமன விடயத்தில் சிக்கல்கள் இருப்பதாகவும், அந்தப் பதவிக்கு தற்போது நியமிக்கப்பட்டு சுகாதார பணிப்பாளர் நியமன பட்டியலில் பின் வரிசையில் இருந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அரசாங்கத்தின் தேவைக்காக மோசடியான வகையில் குறித்த பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.