February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஏ9 வீதியில் அதிகாலையில் கோர விபத்து: மூவர் பலி!

ஏ 9 வீதியில் மாங்குளம் – பனிச்சங்குளம் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வானொன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோதியுள்ளதுடன், அந்த லொறி முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது பயணித்தவர்களும் முன்னால் இருந்த லொறிகளில் பயணித்தவர்களும் காயமடைந்திருந்த நிலையில், அவர்களில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லேரியா, வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.