அரசாங்கத்திற்குள்ளேயே எதிர்க்கட்சியொன்று உருவாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே ஜீ.எல்.பீரிஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் அரசாங்க உறுப்பினர்களிடையே முரண்பாடுகள் காணப்படுவதாகவும், இதனால் உள்ளேயே எதிரணியொன்று உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தினால் மக்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக ஆரம்பித்துள்ள ”அஸ்வெசும” திட்டத்தில் குறைபாடுகள் உள்ளதாகவும், இதனால் அதனை நிறுத்துமாறு ஆளும் கட்சியில் 62 பேர் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.