February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய எவரும் வருவதில்லை”

பலர் அரசியலை சாக்கடை என்று கூறுகின்றார்கள். ஆனால் அதனை சுத்தம் செய்வதற்கு எவரும் வருவதில்லை என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் ‘கலை அமுத விழா 2023’ கண்டி இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக பிரதிநிதிகள் எமது மக்களின் அபிலாஷைகளையும் புறந்தள்ளி உள்ளார்கள் என்றும் அதன்போது ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மலையக மக்கள் பிரதிநிதிகளை சந்தித்த போதும், அதில் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் கலந்துகொள்ளவில்லை என்றும், இதன்மூலம் அவர்கள் தமது அரசியல் நோக்கத்திற்காக மக்கள் அபிலாசைகளை அவர்கள் மதிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.