File Photo
இலங்கை என்பது சிங்கள பௌத்த நாடே என்றும், இந்த நாட்டுக்கு தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழர்கள் வேண்டுமென்றால் எங்களுடன் சமாதானத்துடன் வாழ முடியும் என்றும், அதனை விடுத்து உரிமை கொண்டாடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
களனி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றிலேயே மேர்வின் சில்வா இதனை கூறியுள்ளார்.
இதன்போது ஜனாதிபதிக்கு கோரிக்கையொன்றை விடுத்துள்ள அவர், புலம்பெயர் தமிழர்களுக்கு இங்குள்ள சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ கூடாது என்றும் அவ்வாறு வழங்கினால் களனி மக்களுடன் வந்து ஜனாதிபதியை விரட்ட நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தான் வடக்கு, கிழக்கிற்கு செல்லவுள்ளதாகவும், இதன்போது அங்கே விகாரைகள் மற்றும் தேரர்கள் மீது கைவைக்க எவறாவது முயன்றால் அவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவேன் என்றும் மேர்வின் சில்வா அதன்போது கூறியுள்ளார்.