எதிர்காலத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 11ஆம் தரத்தில் நடத்தாது 10ஆம் தரத்தில் நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப காலத்தில் இந்தப் பரீட்சை 10ஆம் தரத்தில் நடத்தப்பட்ட போதும் பிற்காலத்தில் அது 11ஆம் தரத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயிகும் பரீட்சையை மீண்டும் 10ஆம் தரத்திற்கு மாற்றும் செயற்பட்டை திடீரென செய்ய முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 1, 6 மற்றும் 10 ஆகிய தரங்களில் ஆரம்பிக்கும் வகையில் ஆரம்பம், கனிஷ்ட இளநிலை மற்றும் சிரேஷ்ட இளநிலை என்ற அடிப்படையில் மூன்று வகைப்படுத்தலின் கீழ் கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.