February 27, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வறட்சி: நீர் விநியோகத்திற்கு பாதிப்பு!

Water Cut Common Image

இலங்கை முழுவதும் பல மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலையால் நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பிரதான நீர் நிலைகளின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாலேயே இவ்வாறு நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் இன்று இரவு ஓரளவான மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.