November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நம்பிக்கையில்லாப் பிரேரணை: பின்வாங்கும் எதிர்க்கட்சி!

எதிர்வரும் மூன்று தினங்களில் பாராளுமன்றத்தில் நடைபெறவிருந்த விவாதத்தை இடைநிறுத்தி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்த முடியும் என ஆளும் கட்சியின் கொரடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மூன்று நாள் விவாதம் அவசியம் என்றும், ஆனால் தற்போது அது தேவையில்லை என்றும் தெரிவித்தார். இந்த மூன்று நாள் விவாதத்தை உரிய நேரத்தில் கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வார அட்டவணையில் மலையக பெருந்தோட்ட மக்களின் பொருளாதார, சமூக, கல்வி மற்றும் சுகாதார பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக நாளை எடுத்துள்ளோம். தோட்ட மக்களைப் பற்றி அரசுக்கு அக்கறை இல்லை. தோட்ட மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் சிரமம் இருப்பதால், இந்த வாரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பை அமுல்படுத்த யோசித்து வருகின்றனர். தோட்ட சமூகத்தை முட்டாள்களாக்க முயற்சிக்காதீர்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தேவையான மூன்று நாட்களை பெற்றுக்கொள்வோம். இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு எதிராக அரசாங்கத்துடன் தொடர்புடைய எம்.பி.க்கள் செயற்படுவதாக எமக்கு தெரியவந்துள்ளது. அவர்களுடன் கலந்துரையாடி வருகிறோம். எனவே இதை சரியான நேரத்தில் எடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.