உள்ளூராட்சி மன்றங்களை மீள ஸ்தாபிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையை நடைமுறைப்படுத்த 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவினால் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளூராட்சி மன்றம், நகர சபை மற்றும் மாநகர சபை திருத்தச் சட்டமூலங்களில் உள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த சரத்துகள் நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை அல்லது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.