February 27, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்சி செயலாளர் பதவியில் இருந்து சிவாஜிலிங்கம் விலகினார்!

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டது உண்மை என அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அந்த ஊடக சந்திப்பில் கூறியுள்ள நிசாந்தன், ”ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பயணிப்பதற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். அந்த சமயத்தில் இந்தியாவில் தங்கியிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், அதற்கு முரணான, முற்றிலும் நேர்மாறான கோரிக்கையை வலியுறுத்தி மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது கடிதத்தில் சர்வஜன வாக்கெடுப்பை கோரியிருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கத்தை விலகுமாறு கட்சி தலைமையால் கோரப்பட்டிருந்ததாகவும், இதற்கமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் சிவாஜிலிங்கம் பதவி விலகுவதாக அறிவித்தார் என்றும் நிசாந்தன் கூறியுள்ளார்.