January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹோட்டல் உணவு விலைகள் மீண்டும் உயர்கிறது!

நீர்க் கட்டணம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து ஹோட்டல்களில் உணவு விலைகளையும் அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர்க் கட்டணத்தை 50 வீதத்தால் அதிகரிக்க தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த கட்டண அதிகரிப்பு ஹோட்டல் துறையை பெரிதும் பாதிக்கும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் உணவுப் பொருட்களின் விலைகளை அதிரிக்க வேண்டியேற்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.