January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் போராட்டங்களுக்கு தயாராகும் ஜே.வி.பி!

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு ஜேவிபி திட்டமிட்டுள்ளது.

நீர்க்கட்டணங்கள் அதிகரிப்பு, மருந்து தட்டுப்பாடு மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ”நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் மக்களை தெளிவுப்படுத்தவும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். தற்போது நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மருந்து தொடர்பான பிரச்சினைகளால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பெருமளவில் உயர்வடைந்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் மேலும் அவர்களை நெருக்கடிக்குள் தள்ளி, நீர்க்கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக கூறி இவ்வாறு மக்களை துன்பத்துக்குள் தள்ளுகின்றனர். இதற்கு எதிராக நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.