திருகோணமலை – சீன குடா பகுதியில் பயிற்சி விமானமொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை விமானப் படைத் தளத்தின் சீன குடா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பயிற்சியாளர் மற்றும் பயிற்றுவிப்பாளர் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.