November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வருடத்திற்கு ஒரு பரீட்சை: கல்வி அமைச்சு யோசனை!

பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை மூன்று தவணைகளுக்கு ஏற்றவாறு மூன்று பகுதிகளாக தனித் தனியாக அச்சிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மாணவர்களின் புத்தகப் பையின் சுமையை குறைக்க முடியுமாக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக எடையுடன் புத்தக பைகளை சுமப்பதால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய உபாதைகளை தவிர்க்கவே இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2024 ஆம் ஆண்டின் முதலாம் தரம் தொடக்கம் அனைத்து வகுப்புகளுக்கும் தவணைப் பரீட்சைகள் குறைக்கப்பட்டு வருடத்திற்கு ஒரு பரீட்சை மாத்திரமே நடத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

அவ்வாறு செய்ய முடிந்தால், ஒவ்வொரு பாடம் அல்லது தொகுதியின் முடிவிலும் மதிப்பீடு மூலம் மதிப்பெண்கள் கணினி குறிப்புகளாக பதிவு செய்யப்பட்டு, ஆண்டின் இறுதியில் பரீட்சை மதிப்பெண்களுடன் சேர்க்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறையை நடைமுறைப்படுத்தும் போது பாடசாலைக்கு சமூகமளித்தல், தங்கியிருத்தல், தினசரி வகுப்பில் செயற்படுவதும் கட்டாயமாக்கப்படுவதால், பாடசாலை மாணவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.