November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு ஜனாதிபதிக்கு!

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

சர்வகட்சி மாநாட்டின் பின்னர் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாட்டை ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது.

இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து இரா.சம்பந்தனுக்கும், எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கொழும்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது 13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் பரிந்துரைகளை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழரசுக் கட்சியினர் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட ரீதியில் சந்திப்பொன்றை நடத்துவதற்கும் கோரிக்கைகள் விடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.