February 27, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் பல மாவட்டங்களில் கடும் வறட்சி!

இலங்கையில் சில மாகாணங்களில் கடும் வறட்சியுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமேற்கு, சபரகமுவ உள்ளிட்ட மாகாணங்களில் இவ்வாறாக வறட்சி நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாகாணங்களின் 5 மாவட்டங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி 27,885 குடும்பங்கள் வறட்சி நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் பிரதான நீர்நிலைகளில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாகவும், இதனால் நீர்விநியோகத்தை முறையாக முன்னெடுப்பதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.