
மலையக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துள்ளார்.
அடுத்த வாரமளவில் கொழும்பில் இந்த சந்திப்பை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
இதன்போது மலையக அபிவிருத்தி திட்டங்கள், தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் காணி உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்திய அரசாங்கத்தினால் மலையக மக்களுக்காக வழங்கியுள்ள நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.