கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பயிற்சி அல்லது முன்பள்ளி கற்பித்தல் டிப்ளோமா இல்லாமல் முன்பள்ளிகளை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பொருத்தமான முறைமை இல்லாமல் சிறுவர்களின் மனங்களை குழப்பினால் பாடசாலை கல்வி மூலம் அதனை மீள சீர் செய்ய முடியாது போகும் என்றும் இதனால் முறையற்ற வகையில் முன்பள்ளிகளை நடத்திச் செல்வதை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் 19,000 வரையிலான முன்பள்ளிகள் இயங்கும் நிலையில், அவை தொடர்பில் முறைமயொன்று தயாரிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.