January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

13ஆம் திருத்தம்: பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டை அறிய யோசனை!

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டை அறியும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யோசனையொன்றைமுன்வைக்கவுள்ளார்.

அடுத்த வாரம் பாராளுமன்ற அமர்வின் போது இது தொடர்பில் ஜனாதிபதி விசேட உரையாற்றி அந்த யோசளையை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதற்கு முன்னர் தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்பின் போது 13இல் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த மற்றைய அதிகார பகிர்வுக்கு தயார் என்று ஜனாதிபதி கூறியிருந்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தை தெளிவுப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இதன்போது 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பிலும், பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த மற்றைய அதிகாரங்களை எவ்வாறு பகிர முடியும் என்பது தொடர்பிலும் தெளிவுப்படுத்தி அது தொடர்பில் பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டை அறிய யோசனையை முன்வைக்க ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.