
இலங்கையில் தங்கம் விலையில் சிறியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு சந்தை நிலவரப்படி இன்றைய தினம் ’22 கரட்’ தங்க பவுன் ஒன்றின் விலை 154,500 ரூபா வரையில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் 156,500 ரூபாவுக்கு விற்பனையான தங்க பவுன் ஒன்றின் விலை, இன்றைய தினத்தில் சற்று குறைவடைந்துள்ளது.
இதேவேளை கடந்த வாரத்தில் 169,000 ரூபாவுக்கு விற்பனையான ’24 கரட்’ தங்க பவுன் ஒன்றின் விலை தற்போது 167,000 ரூபா வரையில் குறைவடைந்துள்ளதாக செட்டியார் தெரு நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.