
வவுனியா சிறைச்சாலையில் கைதிகளை உறவினர்கள் சந்திக்கும் நடவடிக்கை மற்றும் வழக்கு செயற்பாடுகளுக்காக கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கைதிகள் நால்வர் சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி கடந்த 25 ஆம் திகதி முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை சிறைச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா சிறைச்சாலையில் 400 இற்கும் அதிகமான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கு மற்றைய கைதிகளுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் தொற்றுப்பரவலாம் என்பதனால் அவர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.