
கொழும்பில் இருந்து இன்று அதிகாலை நுவரெலியா நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று வட்டவளை பகுதியில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது பஸ்ஸில் பயணித்த 18 பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிரே வந்த வாகனமொன்றுக்கு வழிவிட முற்பட்ட போதே குறித்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.