January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சஜித்துடன் பேசியவர் யார்? – அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை இழக்குமா?

அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து மேலும் 15 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்க்கட்சி பக்கம் தாவுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கட்சியை சேர்ந்த பிரபல உறுப்பினர் ஒருவர் இது தொடர்பில் கடந்த வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகின்றது.

15 பேர் கொண்ட குழுவொன்று எதிர்க்கட்சி பக்கம் வந்தால் தங்கள் பக்கத்தில் இடம் வழங்கப்படுமா என்று அந்த உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவ்வாறு வந்தால் ஏற்கனவே வந்துள்ள குழுக்கள் போன்று புதிய குழுவொன்றை அமைத்து நீங்கள் 15 பேரும் செயற்பட முடியும் என்றும், அப்போது தங்களுடன் இணைந்து செயற்பட முடியுமென்றும் எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய 15 பேர் கொண்ட குழு அரசாங்கத்தில் இருந்து விலகினால் அரசாங்கம் அறுதி பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்பதுடன், பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவும் குறைவடையும் என்று கூறப்படுகின்றது.