file photo: Facebook/ Pakistan International Airlines
இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்த வைக்கப்பட்டுள்ள 44 பாகிஸ்தான் சிறைக் கைதிகள் இன்று பாகிஸ்தான் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 7 பெண்களும் 44 ஆண்களும் இன்று பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். .
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்தக் கைதிகளை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்ததாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையே குற்றவாளிகளைப் பரிமாற்றிக்கொள்வது தொடர்பான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, குற்றவாளிகளுக்கான தண்டணையில் குறைந்த பட்சம் 6 மாதங்கள் தாண்டிய சந்தர்ப்பங்களில் கைதிகளை இரு நாடுகளுக்கிடையே பரிமாற்றிக்கொள்ள் முடியும்.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் கைதிகளைப் பொறுப்பேற்று, அழைத்துச் செல்ல பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் வந்துள்ளது. .
நீண்ட காலமாக விசாரணைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான் கைதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்த இலங்கை அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பஷீர் வாலி மொஹமட் தெரிவித்துள்ளார்.