April 21, 2025 10:42:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் இனி இயங்காது!

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் ஜுலை 31ஆம் திகதியுடன் மூடப்படுகிறது.

வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக கொழும்பிலுள்ள தமது தூதரகத்தை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக நோர்வே அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

அதன்படி கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் நடவடிக்கைகள் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளன.

எனினும் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு தேவையான ஏற்பாடுகளை இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் ஊடக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்லோவாக்கியா, கொசோவோ மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களின் நடவடிக்கைகளும் இந்த ஆண்டு முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.