அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி நிதியை பெற்றுக்கொள்வதற்கான வங்கிக் கணக்குகளை திறப்பதற்காக நாடு முழுவதும் அரச வங்கிகளின் முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர்.
இதேவேளை சில பிரதேசங்களில் மக்கள் முதல்நாள் இரவே சென்று வங்கிகளுக்கு அருகில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வங்கிகளில் கணக்கு திறப்பதற்காக பெரும் எண்ணிக்கையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலை வங்கியில் அதிக நெரிசல் நிலை உருவானதால் வங்கி கணக்குகளை திறப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறிப்பிட்ட அளவு வங்கி கணக்கு மாத்திரம் திறக்கப்படுவதனால் பொது மக்கள் முண்டியடித்து வங்கியிலேயே தங்கியிருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் பகுதியிலுள்ள வங்கியொன்றில் இவ்வாறாக மக்கள் நேற்றிரவு முதல் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.