இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னர் உள்ளிட்ட பிரதான நாகரங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சில பிரதேசங்களில் பஸ் பேக்குவரத்துகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.