பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமையவுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியூ கலிடோனியா, பப்புவா நிவ் கினியா, வனுவாட்டு குடியரசு ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி பிரான்ஸ் ஜனாதிபதி கடந்த 24ஆம் திகதிமுதல் உத்தியோகப்பூர்வ விஜயங்களை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் தொடர்ச்சியாக இன்று மாலை அவர் இலங்கை வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.