January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காட்டு யானைகளுக்கு உணவளித்தால் நடவடிக்கை!

இலங்கையின் காடுகளுக்கு இடையிலான வீதிகளில் நிற்கும் காட்டு யானைகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

வனப்பகுதி ஊடான வீதிகளில் வாகனங்களில் பயணிப்பவர்களால் வீதி ஓரங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளுக்கு உணவு அளிப்பதால், அவை வீதிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.

இதனால் யானை தாக்குதல்கள் உள்ளிட்ட அனர்த்தங்களுக்கு அந்த வீதியால் பயணிப்போர் முகம்கொடுக்க நேரிடுகின்றது.

ஆகவே வீதியோரங்களில் யானைகளுக்கு உணவளிப்பதை தவிர்க்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மக்களிடம் கோரியுள்ளது.

அவ்வாறு உணவு வழங்குவது வனவிலங்கு பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.