February 27, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூப்பர்ஸ்டார் இலங்கை வருவரா?

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த்தின்  உதவியை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து நடிகர் ரஜினிகாந்தை இந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதர் டி.வெங்கடேஷ்வரன் அண்மையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

இத்தகவலை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டு;ளது.

இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கு ரஜினி வருகை தர வேண்டும் என அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஜினிகாந்த் வருகையின் மூலம் இலங்கையின் சினிமா, சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும் எனவும் இச்சந்திப்பின் போது டி.வெங்கடேஷ்வரன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக இலங்கையில் உள்ள ராமாயண பாதை, பெளத்த தலங்களை ரஜினிகாந்த் பார்வையிட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இலங்கையின் சுற்றுலா தூதராக நடிகர் ரஜினிகாந்த் செயல்பட வேண்டும் என்பது அந்நாட்டின் விருப்பம். இந்த கோரிக்கையை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பது உறுதி செய்யப்படவில்லை.

இதேவேளை, இலங்கையின் சுற்றுலா துறை தூதராக செயல்பட நடிகர் ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்தால் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு வெடிக்கும் எனவும் இந்திய தமிழ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.