
இலங்கையின் முன்னணி சுகாதார வர்த்தக நாமமான Harpic, பெண்கள் பாடசாலைகள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் கழிவறைகளில் சுகாதாரத் தரத்தை உயர்த்தி வருவதுடன் முறையான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுவ ஜன வேலைத்திட்டம் என்ற சமூகப் பொறுப்பு பிரச்சார நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இரண்டாவது நிகழ்ச்சி மினுவாங்கொட நாலந்த பெண்கள் கல்லூரியில் மே மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இலங்கையின் கல்வி அமைச்சுடன் இணைந்து Harpic சுவ ஜன வேலைத்திட்டத்தினால் மேல் மாகாணம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது, இதன் முதலாவது நிகழ்ச்சியானது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி அம்பத்தளை சமுத்திராதேவி பெண்கள் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்து நடைபெற்றது.
இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த Reckitt Benckiser Lanka Ltd – Harpic வர்த்தக நாம முகாமையாளர் திருமதி தேவிந்தி ஹேவபந்துல, “Harpic’s ‘Sua Jana Mission’ இன் கீழ் பாடசாலை செல்லும் இளம் பெண் பிள்ளைகள் மத்தியில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முறையான சுகாதார நடைமுறைகளை ஊக்குவிப்பதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு இதுவொரு சான்று. மினுவாங்கொடை நாலந்த பெண்கள் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது கட்டத்திற்காக இலங்கையின் கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுவதில் நாங்கள் பெருமையடைகிறோம்.” என தெரிவித்தார்.
“மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவிகள் மத்தியில் கழிவறை சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நல்ல சுகாதார பழக்கங்களை கடைப்பிடிக்க அவர்களை ஊக்குவிப்பதும் எங்களின் இலக்காகும். எங்கள் கல்வித் திட்டங்கள் மற்றும் தொழில்முறை விரிவுரைகள் மூலம் சரியான சுகாதார நடைமுறைகளைப் பேணுவதற்கான அறிவு மற்றும் கருவிகளைக் கொண்டு இளம் பெண் பிள்ளைகளுக்கு அதிகாரம் அளிப்பதாகவும் நாங்கள் நம்புகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கல்வித் திட்டத்தில் கழிவறைகளை சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல் ஆகியவை அடங்கும். பின்னர், மகப்பேறு மற்றும் குழந்தை பொது சுகாதார பரிசோதகர் ஒரு தொழில்முறை உரை நிகழ்த்துவார், சுத்தமில்லாத கழிப்பறைகளைப் பயன்படுத்துவதால் மாணவர்கள் எதிர்கொள்ளும் உடல்நல பாதிப்புகள் மற்றும் ஆபத்துக்கள் ககுறித்தும் இதன்போது விளக்கமளிக்கப்படும்.
சுவ ஜன வேலைத்திட்டம் என்பது Harpic இன் முதன்மையான பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) பிரச்சாரமாகும். Harpic, கல்வி அமைச்சுடன் இணைந்து இந்தத் தொடர் வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் முன்னணி சுகாதார தூய்மை முகவர்களில் ஒன்றான Harpic, Reckitt Benckiser Lanka Ltd இன் முதன்மையான வர்த்தக நாமமாக இருப்பதுடன். இந்த நிறுவனம் வீடு, சுத்தம், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள், ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் முதன்மைச் சந்தைகளில் செயல்படுகிறது. Reckitt Benckiser குழுமத்தில் சுமார் 41,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர் மற்றும் அவர்களது ஏனைய வர்த்தக நாமங்களான Dettol, Mortein, Lysol என சர்வதேச அளவில் அறியப்படுகின்றன.