
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி வடக்கு மாகாண ஆளுநராக பீ.எம்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் வடக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த அனுராதா யகம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த வசந்த கரன்னாகொட ஆகியோர் கடந்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் பதவிகளில் இருந்து ஜனாதிபதியினால் நீக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.