January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடவுச்சீட்டை பெறச் செல்வோருக்கான விசேட அறிவித்தல்!

முன்பதிவு செய்துகொண்டவர்கள் மாத்திரம் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு வருமாறு இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்தவர்கள் உரிய நேரத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தந்து அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்று குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவசரத் தேவையுடையவர்கள் தமது தேவையை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் கடவுச்சீட்டுகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், புதிய திட்டமொன்றை எதிர்வரும் இரண்டு வாரங்களில் அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.