May 25, 2025 16:19:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பசிலை பிரதமராக்க முயற்சி?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை மீண்டும் பாராளுமன்றத்திற்கு அழைத்து வந்து பிரதமர் பதவிக்கு நியமிக்க கட்சிக்குள் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவினால் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டள்ளது.

பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்த்திற்கு வந்தால், அவர் தனது அமெரிக்கக் குடியுரிமையை இல்லாமல் செய்ய வேண்டும் அல்லது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து இரட்டைக் குடியுரிமையை கொண்டவர்கள் எம்.பியாக முடியுமென்ற சரத்தை நிறைவேற்ற வேண்டும்.

இதன்படி பசில் ராஜபக்‌ஷ எம்.பியாக பதவியேற்ற தயார் என்றால் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவர் விலகி அவருக்கு இடமளிக்க வேண்டும்.