குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டு, அது தொடர்பில் அமைச்சரவையினால் அமைக்கப்படும் குழு பரிந்துரை செய்தால் மாத்திரமே குரங்குகளை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சீனாவில் உள்ள நிறுவனமொன்றால் நடத்திச் செல்லப்படும் மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்தக் கோரிக்கை தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர், இந்த விடயம் தொடர்பில் சட்டத்தன்மைகள் குறித்தும் ஆராய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அமைச்சரவை ஊடாக தீர்மானம் எடுத்து, வனஜீவராசிகள் திணைக்களம், மிருககாட்சிசாலை, சட்டமா அதிபர் திணைக்களம், விவசாய அமைச்சு மற்றும் திணைக்களம் ஆகியவற்றை உள்ளடக்கிய குழுவொன்றை அமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.