அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்த தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி தேசிய அரசாங்கம் தொடர்பில் விசேட அறிவித்தலை வெளியிட்டு, இதில் இணைந்துகொள்ளுமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறு கட்சிகளின் பிரதிநிதிகளை அண்மையில் ஜனாதிபதி சந்தித்த போது அவர் இது தொடர்பில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி முதலில் அனைவரையும் அழைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.