November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காலிமுகத்திடலில் கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகளுக்குத் தடை!

கொழும்பு – காலி முகத்திடலில் இசை நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள் அல்லது பிற ஒன்றுகூடலுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலை பொது மக்கள் இடையூறு இன்றி நேரத்தை செலவிடும் இடமாக மாத்திரம் பயன்படுத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்குறித்தவாறு தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் காலி முகத்திடலில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த எந்தவொரு இசை நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள் அல்லது பிற ஒன்றுகூடலுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இதேவேளை 220 மில்லியன் செலவில் காலி முகத்திடலை அபிவிருத்தி செய்யும் பணியை இலங்கை துறைமுக அதிகாரசபை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.