File Photo
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை பிரதமராக்க ஐக்கிய மக்கள் சக்தியில் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த குழுவொன்று ஜனாதிபதி தரப்புடன் கலந்துரையாடியுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சியை சேர்ந்த பெருமளவான எம்.பிக்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்நிலையில் அரசாங்க தரப்பில் இருந்தும் பெருமளவான எம்.பிக்கள் எதிர்க்கட்சி பக்கம் வரவுள்ளதாகவும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் பிரச்சினை ஏற்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலைமையில் ஆளும் கட்சியுடன் இணைந்துகொள்ளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை கொண்டு சஜித் பிரேமதாஸவை பிரதமராக்க முடியுமா? என்று ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.