உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் திகதி குறிப்பிடப்படாது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்த போதும், தேர்தலுக்கான நிதி கிடைக்காத காரணத்தினால் குறித்த தினத்தில் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் நிதி அமைச்சு அதற்கான நிதியை வழங்காத காரணத்தினால் ஏப்ரல் 25 வரையில் அந்தத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
எனினும் நிதி அமைச்சினால் நிதியை வழங்குவது தொடர்பில் இதுவரையில் அறிவிக்கப்படாத காரணத்தினால் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த முடியாது என்றும், அதற்கான திகதியை பின்னர் தீர்மானிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.