February 27, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிவாயு விலை பெருமளவில் குறைப்பு!

சமையல் எரிவாயு விலையை பெருமளவில் குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,005 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பிற்கமைய, அதன் புதிய விலை 3,728 ரூபாவாகும்.

அத்துடன் 5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,502 ரூபாவாகும்.

2.3 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 183 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 700 ரூபாவாகும்.

ஏப்ரல் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் இது நடைமுறைக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.