
தான் பதவியில் இருக்கும் வரையில் நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடமளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை முகாமில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தலை விடவும் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும் இதற்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வருவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் மாத்திரமல்லாது, முப்படைகளின் உதவியுடன் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.