எதிர்க்கட்சியில் இருந்து பெருமளவான எம்.பிக்கள் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரத்தில் பாராளுமன்றம் கூடும் போது அவர்கள் ஆளும் கட்சி பக்கத்திற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பில் இருக்கும் 10க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாகவும், அவர்களில் சிலர் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கட்சித் தாவும் உறுப்பினர்களிடையே தமிழ், முஸ்லிம் எம்.பிக்களும் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் உறுப்பினர்கள் பெருமளவில் ஆளும் கட்சிக்கு சென்றால் அந்தக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் சிக்கல் ஏற்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
இதனால் தமது அணியில் இருந்து அரசாங்க பக்கத்திற்கு செல்வோரை தடுத்து நிறுத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.