உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான நிதி எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் கிடைக்குமாக இருந்தால் தேர்தல் தினம் குறித்து தீர்மானம் எடுக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு நிதி கிடைத்தால் தபால் மூல வாக்கெடுப்பை இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியுமாக இருக்கும் என்று அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இது தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் நிலைமையை ஆராய்ந்தே முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்த்த போதும், அதற்கான நிதியை வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சு இதுவரையில் பதிலளிக்கவில்லை.
இதனால் குறித்த தினத்தில் தேர்தலை நடத்துவதில் நெருக்கடிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நிதி கிடைக்கும் வரையில் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.