November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பால்மா விலைகள் குறைந்தன!

ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினாலும் 400 கிராமின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை மற்றும் நாட்டில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டமை ஆகிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பால்மா விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஹோட்டல்களில் பால் தேநீரின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.