மார்ச் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி பஸ் கட்டணம் 12.9 வீதத்தால் குறைக்கப்படும் என்று பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.
இதேவேளை ஆகக் குறைந்த கட்டணத்தை 34 ரூபாவில் இருந்து 30 ரூபாவாக குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்தே போக்குவரத்து அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
அத்துடன், ஆட்டோ உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளின் கட்டணத்தை குறைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.