மார்ச் 29 நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 135 ரூபாவினால் குறையும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒடோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், சுபர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 45 ரூபாவினாலும் குறைக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்பின் போது மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.