April 26, 2025 8:54:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளுக்கு அனுமதி!

இலங்கையில் நிலவும் முட்டைத் தட்டுப்பாட்டை தொடர்ந்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான அறிக்கை இன்றைய தினத்தில் வர்த்தக அமைச்சுக்கு அனுப்பப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் முட்டைக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டதுடன், முட்டை விலையும் அதிகரித்திருந்தது.

இதனால் இந்தியாவில் இருந்து 2 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி முதற்தொகுதி முட்டைகள் இந்தியாவில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அந்த முட்டைகள் தெதாடர்பான பரிசோதனைகளை தொடர்ந்து அவற்றுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.