இந்த வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2024 இறுதி வரையில் தற்போதைய ஜனாதிபதிக்கு பதவியில் இருக்க முடியுமாக இருக்கின்ற போதும், அதற்கு முன்னரே தேர்தலுக்கு செல்வதற்கே அவர் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டவர் என்பதனால் அவரால் முன்கூட்டியே தேர்தலுக்கு செல்வதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதனால் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொண்டு அவர் இந்த வருட இறுதியில் தேர்தலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்காக இப்போதே தயாராகுமாறு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் பணத்தைப் பெற்று ஓரளவாவது பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டு ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்றால் அதில் தான் வென்றுவிடலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்புவதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.