May 29, 2025 10:27:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை – இந்தியா பயணிகள் கப்பல் சேவை: 4 மணித்தியால பயணம்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையே இந்த சேவை முன்னெடுக்கப்படும் என்று இலங்கை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது காங்கேசன் துறைமுகத்தில் கடற்படையின் ஒத்துழைப்புடன் புதிய பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த பயணிகள் கப்பல் சேவையில் ஒரே தடவையில் சுமார் 150 பயணிகள் பயணிக்க முடியும் எனவும், பயண நேரம் சுமார் 4 மணித்தியாலங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை பயணிப்பதற்காக பயணி ஒருவரிடமிருந்து 50 அமெரிக்க டொலர் அறவிடப்படும் என்பதோடு, ஒரு பயணிக்கு அதிகூடியதாக 100 கிலோ பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.