January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்!

உள்ளூராட்சித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கும் அதற்கான தபால் மூல வாக்கெடுப்பை மார்ச் 28, 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் தேர்தலுக்கான நிதி இன்னும் நிதி அமைச்சினால் வழங்கப்படாமையினால் வாக்குச் சீட்டுகளை அச்சிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் தபால் மூல வாக்கெடுப்பை ஒத்தி வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மாலை அறிவித்துள்ளது.

இதேவேளை உள்ளூராட்சி தேர்தலை ஒத்தி வைப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதுடன், அது தொடர்பிலும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.